சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை நடத்திய தனியார் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம்

சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை நடத்திய தனியார் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update:2023-01-25 03:04 IST

பெங்களூரு:

சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை நடத்திய தனியார் பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

பள்ளி முற்றுகை

பெங்களூரு நாகரபாவி பகுதியில் ஆர்சிட் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக அரசு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்த பள்ளியில் உள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு பதிலாக மாநில பாடத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள், நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பள்ளி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரூ.1 லட்சம் கட்டணம்

மேலும், சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய தரத்தில் பாடம் நடத்துவதாக கூறி மாணவர்களை சேர்த்து விட்டு, தற்போது மாநில பாடதிட்டங்களை நடத்துவதாக குற்றம்சாட்டினர். மேலும், சி.பி.எஸ்.இ. தரம் என கூறி, மாணவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பிள்ளைகளின் படிப்பு மற்றும் வாழ்க்கை பாதிக்கப்படும் என வேதனை தெரிவித்தனர். எனவே இதுபோன்ற பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரினர். பெற்றோர்களின் போராட்டத்தால் பள்ளி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்