மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்...! அப்பாவி கணவனின் அலறல்- பிரதமர் அலுவலகத்திற்கு புகார்

மனைவியிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்து உள்ளார் ஒரு கணவர்

Update: 2022-11-03 05:16 GMT

பெங்களூரு

பெங்களூரைச் சேர்ந்த யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் தனது டுவீட்டை பெங்களூரு நகர போலிஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜு ஆகியோருக்கும் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக யதுநந்தன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "யாராவது எனக்கு உதவுவார்களா? அல்லது இது நடந்தபோது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை. ஏனென்றால் நான் ஒரு மனிதன்!

என் மனைவி என்னை கத்தியால் தாக்கினாள். இது தான் நரி சக்தியா? இதற்காக அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா? மனைவியால் கத்தியால் குத்தப்பட்டதில் தனது கையில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவரது டுவீட்டிற்கு பதிலளித்த பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக புகார்கொடுக்குமாறும் அவரது குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். யதுநந்தன் ஆச்சார்யா பல்வேறு பிரிவுகளின் ஆதரவைப் பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.



Tags:    

மேலும் செய்திகள்