காலிஸ்தான் ஆதரவு செய்திகள்: 6 யூடியூப் சேனல்கள் முடக்கம் மத்திய அரசு அதிரடி
காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தற்போது முடக்கி உள்ளது.
புதுடெல்லி,
பஞ்சாப்பில் காலிஸ்தான் கோஷங்கள் மீண்டும் உயிர்பெறத்தொடங்கி உள்ளன. காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் இறங்கியது அங்கு பெரும் அதிர்வலைகளை ஏறபடுத்தியது.
இந்த நிலையில் அங்கு காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பி வந்த 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு தற்போது முடக்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்த இந்த சேனல்கள் கடந்த 10 நாட்களாக முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்பு செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சேனல்களை யூடியூப் நிறுவனம் முடக்கி இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.