ராஜஸ்தான்: பிரம்மா கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

பிரதமர் மோடி அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2023-05-31 17:59 IST

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாஜக அரசின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் விரைந்தார். நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு முன்னதாக, பிரதமர் மோடி அம்மாநிலத்தில் உள்ள பிரம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் கருவறையில் உள்ள பிரம்மா சிலை முன்பு பிரதமர் மோடி ஆரத்தி காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு அச்சகர் பிரசாதம் வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்