நாடாளுமன்ற திறப்பு விழாவை, முடிசூட்டு விழாவாக கருதுகிறார் பிரதமர் மோடி - ராகுல்காந்தி விமர்சனம்

புதிய நாடாளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவீட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2023-05-28 07:37 GMT

புதுடெல்லி,

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்கவில்லை என்றும், பிரதமர் மோடி திறந்துவைப்பதை எதிர்த்தும் 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்புவிழா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவீட்டரில் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

நாடாளுமன்றம் என்பது மக்களின் குரல். "புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்துவைத்துள்ள பிரதமர் மோடி, இது தனக்கான முடிசூட்டும் நிகழ்ச்சியாக நினைத்துக்கொள்கிறார்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்