ஜனாதிபதி தேர்தல்: பணிவுடன் நிராகரித்துவிட்டேன் - சரத் பவார் டுவீட்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-15 15:59 GMT

மும்பை,

இந்திய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்பட்டுகிறது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது வேட்பாளரை யாரை நிறுத்தலாம் என்பது குறித்து கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்தலாம் என மம்தா தெரிவித்தார். ஆனால் அதை சரத் பவார் ஏற்காமல் மறுப்பு தெரிவித்தார்.Presidential election: I politely declined - Sarabjit Pawar tweet

இந்நிலையில், இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக எனது பெயரைப் பரிந்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். பொது வேட்பாளராக என்னை பரிந்துரைத்தாலும் நான் அதை பணிவுடன் நிராகரித்து விட்டேன். பொதுமக்களின் நலன்களுக்காக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்