உ.பி. சாலை விபத்து - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
உ.பி. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் டபுள் டெக்கர் பேருந்து ஒன்று , பால் லாரி மீது மோதிய விபத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான டபுள் டெக்கர் பேருந்தில் பயணித்த 19 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.