பிரதமர் மோடியின் பாராட்டு, மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கம் அளிக்கிறது-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை
பிரதமர் மோடியின் பாராட்டு, மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கம் அளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு: பிரதமர் மோடியின் பாராட்டு, மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கம் அளிப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
கொரோனா பரவல்
பிரதமர் மோடி தனது 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை மைசூருவில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூரு திரும்பினார். இந்த நிலையில் பெங்களூருவில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக எனக்கு தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார். நான் நாளை(இன்று) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவரது ஆலோசனைகள் ஏற்கப்படும். அவருக்கு உரிய கவுரவத்துடன் பதில் அனுப்புவேன். கர்நாடகத்தில் வெற்றிகரமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்தியாவில் பிரதமர் மோடி சிறப்பான முறையில் செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தினார்.
பணியாற்ற ஊக்கம்
மத்திய அரசு கர்நாடகத்திற்கு ஏராளமான உதவிகளை வழங்கியது. மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கியது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். கர்நாடக அரசின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
இது எனக்கு மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கம் அளிப்பதாக உள்ளது. பஞ்சமசாலி சமூகத்தின் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக அறிவியல் பூர்வமான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.