நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ...!!!
நிலவில் சந்திரயான்-3 தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பெங்களூரு,
நிலவை ஆராய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த மாதம் அனுப்பியது. தொடர்ந்து வெற்றிகரமாக சந்திரயான்-3 விண்கலம் பயணித்து நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்த நிலையில், விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர், கடந்த 23-ந் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரோ நேற்று, லேண்டரில் இருந்து ரோவர் வெளியே வரும் வீடியோவை வெளியிட்டது. இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிரங்கிய இடத்திற்கு 'சிவசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது, அந்த இடத்தில் ஊர்ந்து செல்லும் ரோவரின் புதிய வீடியோவை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.