டெல்லியில் வருடாந்திர தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ள வருடாந்திர தேசிய மாணவர் படை பேரணியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

Update: 2023-01-28 03:25 GMT

புதுடெல்லி,



நாட்டில் தேசிய மாணவர் படை தோற்றுவிக்கப்பட்ட 75-வது ஆண்டு தினத்தில் இன்று பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் இன்று மாலை 5.45 மணியளவில் பேரணி ஒன்று நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதனை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது. இந்த நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை 75 ஆண்டுகளை வெற்றியுடன் கடந்ததன் நினைவாக, சிறப்பு தபால் தலை ஒன்றும் மற்றும் ரூ.75-க்கான சிறப்பு நாணயம் ஒன்றும் வெளியிடப்படும்.

இதனை வெளியிட்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். பகல் இரவு நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் ஒரே பாரதம் சிறந்த பாரதம் என்ற பொருளிலான கலாசார நிகழ்ச்சி ஒன்றும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்படி 19 வெளிநாடுகளை சேர்ந்த 196 அதிகாரிகள் மற்றும் பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.

அதற்கு முன்பு, ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் ஆசிந்த் பகுதியில் நடைபெறும் சுவாமி தேவ்நாராயணனின் 1,111-வது ஆண்டுதின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று செல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்