இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!
இமாச்சல பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்கிறார். பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு செல்லும் அவர், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்று பிரதமர், பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உள்ளார். இந்த தகவல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.