ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Update: 2024-10-02 10:29 GMT

Image Courtesy : ANI

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி, ரூ.83,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 15-ந்தேதி ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வருகை தந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் மீண்டும் ஒருமுறை பங்கெடுக்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் பல நூறு கோடிகள் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தேன்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வீடுகளை பெற்றுள்ளனர். தற்போது மீண்டும் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வளர்ச்சி திட்டங்கள் ஜார்க்கண்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் பழங்குடி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்