அசாமில் ரூ.17,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-03-09 09:21 GMT

திஸ்பூர்,

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். பூங்காவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, அங்கு யானை சவாரி செய்தார்.

தொடர்ந்து ஜோர்ஹாட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அசாம் மாநிலத்தில் சுமார் ரூ.17,500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சர்பானந்த சோனோவால், அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு திட்டம், சிவசாகர் பகுதியில் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கவுகாத்தி மற்றும் திக்பாய் பகுதிகளில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.8,450 கோடிக்கு கட்டப்பட்ட 5.5 லட்சம் வீடுகள் மற்றும் ரூ.1,300 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்