ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலைவழி மார்க்கத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி
வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
வாரணாசி,
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ளநிலையில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்காக வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்துக்கு நேற்றிரவு பிரதமர் மோடி சென்றடைந்தார். அவரை உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்நிலையில் நீண்ட நாளுக்குப் பிறகு வாரணாசி சென்றடைந்த பிரதமர் மோடி, ஷிவ்பூர்-புல்வாரியா-லஹர்தாரா சாலை வழி மார்க்கத்தை ஆய்வு செய்தார். அவருடன் யோகி ஆதித்யநாத்தும் உடனிருந்தார்.
வாரணாசியின் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக ரெயில்வே மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.