ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-06 15:47 GMT

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

இந்த நிலையில், ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது;

"ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தங்கம் வென்றது உற்சாகமளிக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இவர்களின் அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை விளையாட்டை மட்டுமல்ல, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன. இந்த வெற்றி, இவர்களின் மன உறுதிக்கு சான்றாகும்." இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்