கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2023-03-01 21:30 GMT

புதுடெல்லி,

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தி அறிவித்தன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. அந்தவகையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'வீடுகளுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதைப்போல வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலையும் ரூ.350 அதிகரித்து இருக்கிறது. இந்த கொள்ளை எவ்வளவு நாள் தொடரும்? என மக்கள் கேட்கிறார்கள்' என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்