ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு: பார்த்தா சாட்டர்ஜி நீதிமன்ற காவல் டிசம்பர் 22 வரை நீட்டிப்பு
ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி நீதிமன்ற காவல் டிசம்பர் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, கல்வி மந்திரியாக இருந்த பார்த்தா சட்டர்ஜியும், அவருடைய உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியும் அமலாக்கத்துறையால் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மேலும் அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடிக்கு மேற்பட்ட ரொக்கமும், இன்னொரு வீட்டில் ரூ.28 கோடியும் கைப்பற்றப்பட்டன. ஏராளமான தங்க, வெள்ளி நகைகளும் சிக்கின. அவர்கள் இருவரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் மேற்குவங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 22 வரை நீட்டித்து கொல்கத்தாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.