ஆய்வகத்தில் வாயுக் கசிவு 30 மாணவிகள் பாதிப்பு
கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டதால் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
ஐதராபாத்
ஐதராபாத் நகரின் செகந்திராபாத் பகுதியில் உள்ள மேற்கு மாரேட்பள்ளியில் கஸ்தூரிபா காந்தி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் ஆய்வகத்தில் நேற்று வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அனைத்து மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை அப்பகுதியினர் உதவியுடன் பள்ளி ஊழியர்கள் கீதா நர்சிங் ஹோமில் சேர்த்தனர்.
ஆனால், கல்லூரி ஆய்வகத்தில் இருந்து வாயு கசிவு ஏற்படவில்லை என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கல்லூரி எல்லைச் சுவரில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசியதால், மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர் என கூறி உள்ளது.
ஆய்வகத்தில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, கல்லூரி நிர்வாகம் வளாகத்தை ஆய்வு செய்தது. எரிவாயு கசிவு இல்லை என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.