ஜனாதிபதி தேர்தலில் முன்அனுமதியுடன் மாநிலங்களில் எம்.பி.க்கள் ஓட்டு போடலாம் - தேர்தல் கமிஷன் தகவல்

ஜனாதிபதி தேர்தலில் முன்அனுமதியுடன் மாநிலங்களில் எம்.பி.க்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

Update: 2022-06-23 02:55 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்தில் அறை எண்.63-ல் ஓட்டு போட வேண்டும். அதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் டெல்லியில் இருந்து ஓட்டு போட முடியாத எம்.பி.க்கள், தேர்தல் கமிஷனுக்கு ஒரு படிவத்தை நிரப்பி அனுப்பி முன் அனுமதி பெற்று, மாநில சட்டசபைகளில், யூனியன் பிரதேச வாக்குச்சாவடிகளில் ஓட்டு போடலாம்.

இவ்வாறு மாநில சட்டசபைகளில் ஓட்டு போட விரும்புவோர் முன் அனுமதி பெறுவதற்கு வாக்குப்பதிவு நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று விட வேண்டும். இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்