சுற்றுலாப் பயணிகள் ரசிக்க இடுக்கி அணை திறப்பு
வாராந்திர பராமரிப்புப்பணிகளுக்காக புதன்கிழமை சுற்றுலா பயணிகள் அணையை பார்வையிட அனுமதியில்லை.
இடுக்கி,
இடுக்கி அணை பல்வேறு வரலாற்று சிறப்புமிக்கதாகும். இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளபோதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இடுக்கி அணையை காண பொதுமக்களுக்கு அனுமதி அளித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவு தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்க ஏதுவாக இடுக்கி அணை திறக்கப்பட்டுள்ளது.
டிச.3-ம் தேதி வரை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை அணையை சுற்றுலா பயணிகள் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நுழைவுக்கட்டணமாக ரூ.150, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாராந்திர பராமரிப்புப்பணிகளுக்காக புதன்கிழமை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ள