வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் - மத்திய அரசு அறிவிப்பு

அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-23 11:22 GMT

புதுடெல்லி,

உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 31-ந்தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை வெங்காய ஏற்றுமதிக்கான தடை தொடரும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டி.ஜி.எப்.டி.) தெரிவித்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான விவகாரங்களை கையாளும் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக டி.ஜி.எப்.டி. செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்