'ஒரு நபருக்கு ஒரு கார்': பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

இந்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.;

Update:2023-01-21 02:52 IST

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த சுனாமி ஆன் ரோட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆண்டுதோறும் காற்று மாசுபாடு காரணமாக 11 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 'ஒரு நபருக்கு ஒரு கார்' என்பன உள்ளிட்ட கொள்கைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இந்த பொதுநல மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசின் கொள்கை சார்ந்த விவகாரங்களில் தலையிட முடியாது என்பதால், பொதுநல மனுவையும் விசாரிக்க முடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்