ஒடிசா மந்திரியை கொலை செய்யும் நோக்கத்துடனே சுட்டார் - முதல் தகவல் அறிக்கையில் தகவல்
பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த நாபா கிஷோர் தாஸ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில், பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு மந்திரியை கொலை செய்யும் தெளிவான நோக்கம் இருந்தது என்று பிரஜ்ராஜ்நகர் போலீஸ் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் பிரதும்ன்ய குமார் ஸ்வைன் கூறியுள்ளார்.
ஆனால், கொலைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அதே சமயத்தில், உதவி சப்-இன்ஸ்பெக்டருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மனநல நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.