சட்டப்பேரவை தேர்தல்: மத்தியபிரதேசத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

Update: 2023-10-21 22:55 GMT

கோப்புப்படம்

போபால்,

பா.ஜனதா கட்சி ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில், மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 3-ந் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நிலையில், மத்தியபிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிக்கையை நேற்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 30-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் பரிசீலனை அக்டோபர் 31-ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 2-ந் தேதி ஆகும்.

இந்த தேர்தலில் 5.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 229 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா 136 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்