குடிநீர், சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு வந்த நோட்டீஸ்...

சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி தாஜ்மகாலுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2022-12-20 05:52 GMT

லக்னோ,

17-வது நூற்றாண்டில் முகலயாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ்மகால், இன்று வரை முகலாயர்களின் கட்டிட கலைக்கு பெரும் சான்றாக விளங்கி வருகிறது. இதனைக் காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்.

இந்நிலையில் சுமார் 370 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக தாஜ்மகாலுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரி செலுத்தக்கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுமார் 1.9 கோடி நிலுவைத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் முகலாய மன்னர் அக்பரால் கட்டப்பட்ட ஆக்ரா கோட்டைக்கும் சுமார் 5 கோடி வரி நிலுவைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முகலாய மன்னர்கள் தங்கள் தலைநகரை ஆக்ராவில் இருந்து டெல்லிக்கு மாற்றுவதற்கு முன், ஆக்ரா கோட்டையில் இருந்தே ஆட்சி புரிந்து வந்தனர். இந்த ஆக்ரா கோட்டை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தாஜ்மகால் மற்றும் ஆக்ரா கோட்டைக்கு தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் புராதான மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு சொத்து, குடிநீர் வரிகள் வசூலிக்கப்படுவதில்லை என்றும் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்