உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு

சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால், பயங்கரவாதம், நக்சல்வாதம், ஊழல் மற்றும் சாதியவாதம் போன்ற விவகாரங்களே கிடைத்தன என யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

Update: 2024-09-28 16:12 GMT

யமுனா நகர்,

உத்தர பிரதேசத்தில் யமுனா நகர் பகுதியில் நடந்த பொது கூட்டத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, யமுனாவுக்கு அந்த பக்கம் உத்தர பிரதேசம் இருந்தது. ஏழரை ஆண்டுகளுக்கு முன் நிலைமை என்னவாக இருந்தது? ஒவ்வொரு 3 நாட்களுக்கு ஒரு முறை வன்முறைகள் நடக்கும். பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு இருக்கும்.

தொழிலதிபர்களோ, மகள்களோ பாதுகாப்பாக இல்லை. ஆனால், இந்த ஏழரை ஆண்டுகளாக உத்தர பிரதேசத்தில் எந்த வன்முறையும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, சுதந்திரத்திற்கு பின்னர் 60 ஆண்டுகளாக நாட்டை காங்கிரஸ் ஆட்சி செய்தது.

நாட்டில் பயங்கரவாதம், நக்சல்வாதம், ஊழல் மற்றும் சாதியவாதம் போன்ற விவகாரங்களே காங்கிரசால் கிடைத்தன. ஒரே பாரதம் வளர்ச்சிக்கான பாரதம் என்ற பெயரில் நாடு முன்னேறி செல்லும்போது, தொல்லைகளின் கண்டுபிடிப்பாளர்களான காங்கிரசை நாம் ஏற்க கூடாது என்றும் பேசியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்