காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை - மெகபூபா முப்தி
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் புல்வாமா மாவட்டத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவின் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் மத்திய ரீசர்வ் போலீஸ் படையின் உதவி சப்-இன்ஸ்பெட்கர் வினோத் குமார் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையை தொடங்க தேவை ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என நாம் கூறினால், வாஸ்பாய் போன்று பாகிஸ்தானுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை' என்றார்.