கப்பன் பூங்காவுக்குள் உணவு பொருட்கள் சாப்பிட தடை

தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பதால் கப்பன் பூங்காவுக்குள் உணவு பொருட்கள் சாப்பிட தடை விதித்து தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-09-18 20:27 GMT

பெங்களூரு:

பெங்களூரு விதானசவுதா அருகே கப்பன் பூங்கா உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இவ்வாறு வரும் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பூங்காவுக்குள் வைத்து உணவுகள் சாப்பிட தோட்டக்கலைத்துறை தடை விதித்துள்ளது. அதாவது கப்பன் பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் அங்கிருந்து சாப்பிட்டு விட்டு மீதி உணவுகள், பிற உணவு பொருட்களை வீசி செல்கிறார்கள். இவ்வாறு செய்வதால், தெரு நாய்கள் வந்து அந்த உணவு பொருட்களை சாப்பிட மோதிக் கொள்கின்றன. இதுதவிர எலிகள் தொல்லையும் ஏற்படுகிறது. இதன்காரணமாக கப்பன் பூங்காவுக்குள் பொதுமக்கள் உணவுகளை சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்த கப்பன் பூங்காவுக்குள் உணவு சாப்பிட தடை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இல்லை என்றும், தற்போது தான் அந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தான் உணவுகளை கொண்டு செல்ல காவலாளிகள் தடை விதிப்பதாகவும் தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தோட்டக்கலைத்துறை பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்