யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது - பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு
யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
யுபிஐ வழியாக ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் இந்த விதிமுறைகள் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேசிய பரிவர்த்தனை கழகத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கப்படாது என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. பேடிஎம் யுபிஐ பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் எந்த விதமான கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம் கூறிய நிலையில் பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.