தங்கவயல் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை

ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் தங்கவயல் தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்று கே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-30 18:45 GMT

கோலார் தங்கவயல்:-

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான கே.ராஜேந்திரன் தங்கவயலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இன்னும் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆனால் வேறு தொகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர், தான் கோலார் தங்கவயல் தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர் என்று கூறி வருகிறார். மேலும் அவர் பேனர்கள் வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்.

இதுபோன்ற போலியான பிரசாரத்தை யாரும் நம்ப வேண்டாம். கோலார் தங்கவயலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பலர் இருந்தும், வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் தங்களை தங்கவயல் தொகுதி வேட்பாளராக கூறுவது கண்டனத்துக்குரியது. பூத் மட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தான், கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்