70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
பஞ்சாப், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ரவுடிகளையும், அவர்களது சிண்டிகேட்டையும் பிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். போதைப்பொருள், கள்ளநோட்டு கடத்தல்காரர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.