சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்

கட்சி அலுவலகத்தில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2024-05-10 15:18 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 50 நாள் சிறை வாசத்திற்கு பின் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலை வழி நெடுகிலும் அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இடைக்கால ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு நன்றி. சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கடவுளின் ஆசி எனக்கு உண்டு. நாளை காலை 11 மணிக்கு அனுமன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்த உள்ளதாகவும், கட்சி அலுவலகத்தில் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக  திகார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்