3 ஆண்டுகளுக்கு பின்னர் நேபாளம்-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை
3 ஆண்டுகளுக்கு பின்னர் நேபாளம்-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது.
காத்மாண்டு,
நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சீனாவின் கிங்டாவ் விமான நிலையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஹிமாலயா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் நேரடி விமானம் இயக்கப்பட்டது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த விமான சேவை 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் காத்மாண்டுவில் இருந்து கிங்டாவுக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. இதன்மூலம் சீனாவில் இருந்து நேபாளம் நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இது பொருளாதார ஒத்துழைப்பை அதிகரித்து இருதரப்பு நட்பை ஆழப்படுத்தும் என நேபாளத்துக்கான சீன தூதர் சென் சாங் தெரிவித்தார்.