கொலீஜியம் நடைமுறை விவகாரத்தில் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட் இடையே சமநிலை தேவை - தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்து

மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்தார்.

Update: 2022-11-26 00:22 GMT

புதுடெல்லி,

அரசியலமைப்பு நாள் கொண்டாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பார் கூட்டமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்றார். இவர் அண்மையில் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜீயம் நடைமுறைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இதே நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று பேசினார். அப்போது அவர், கொலீஜியம் நடைமுறை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது என்றும், இரு தரப்புக்கும் இடையே சமநிலை தேவை என்றும் தெரிவித்தார்.

மேலும் கொலீஜியம் மூலமாக மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்புவதற்கு முன், பல்வேறு கட்டங்களாக பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே அரசியலமைப்பு சார்ந்த அரசாட்சி நடைமுறை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்