சிக்கமகளூரு அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்

சிக்கமகளூரு அருகே ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-05-02 18:45 GMT

சிக்கமகளூரு-

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளன. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டம் மாகுந்தி சோதனை சாவடியில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ரூ.90 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இதுகுறித்து காரில் இருந்தவரிடம் போலீசார் கேட்டனர். அதற்கு அவர் தொழில் சம்பந்தமாக அந்த பணத்தை கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து ரூ.90 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்