தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு நாயுடு - பா.ஜனதா விருப்பம்
ஆந்திராவில் தெலுங்குதேசம், பா.ஜனதா, ஜனசேனா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இந்த கூட்டணியில் முக்கிய தலைவராக உருவாகி இருக்கிறார் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திராவில் தெலுங்குதேசம், பா.ஜனதா, ஜனசேனா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.
இதைத்தொடர்ந்து இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்க பா.ஜனதா விருப்பம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஆந்திராவுக்கான பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் சித்தார்த் நாத் நேற்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.
இதை கேட்டுக்கொண்ட சந்திரபாபு நாயுடு, தனது கட்சியினருடன் பேசி 48 மணி நேரத்தில் பதில் தெரிவிப்பதாக கூறியதாக கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன.