உண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும் - பரூக் அப்துல்லா
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும்.;
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் ஆகும். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட், புதிய அரசு அமைந்த பிறகே அறிவிக்கப்படும். எனவே, இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஆகும். வழக்கமாக பட்ஜெட் உரையில் தமிழகத்தை குறிப்பிடும் வகையில் திருக்குறள் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை மேற்கோள் காட்டுவார் நிர்மலா சீதாராமன். ஆனால், இன்றைய உரையில் திருக்குறள் உள்ளிட்ட எந்த மேற்கோள்களும் இடம்பெறவில்லை.
இந்தநிலையில் தேசிய மாநாட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பரூக் அப்துல்லா இடைக்கால பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளரிடம் கூறியதாவது:-
உண்மையான பட்ஜெட் ஜூலையில் வரும். அதில் மக்கள் பயனடைவார்கள், சுற்றுலா பெருகும், தொழில்களும் வளரும், நாடு முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.