சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்

சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-09-20 21:31 GMT

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் பெங்களூரு மாநகராட்சி சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மசோதா நேற்று விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அந்த மசோதாவில் மாநகராட்சியில் உள்ள மொத்த வார்டுகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறாமல் இருக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் கர்நாடக சரக்கு-சேவை வரி சட்டத்திருத்த மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்