இரண்டு மகன்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-03-04 19:37 IST
இரண்டு மகன்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

கோப்புப்படம் 

மந்த்சூர்,

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூர் மாவட்டத்தில் இரண்டு மகன்களுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ருண்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

போர்வை விற்பனை செய்யும் பிரகாஷ் (40 வயது) என்ற நபர் அவரது 10 மற்றும் 12 வயதுடைய மகன்கள் இருவரும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டனர். மகன்களை கொன்றுவிட்டு அந்த நபர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களது உடல்களை கைப்பற்றினர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்