வங்கி கடனை திரும்பி செலுத்த முடியாததால் விவசாயி மனைவியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை

வங்கி கடனை திரும்பி செலுத்த முடியாததால் விவசாயி தனது மனைவியுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-07-05 23:04 IST

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் படஹட் கிராமத்தை சேர்ந்தவர் தர்மேந்திரபட்டேல் (வயது 41). இவரது மனைவி சந்தியா (வயது 35).

விவசாயி-யான தர்மேந்திரபட்டேல் வங்கியில் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனுக்கான தவணை தொகையை தர்மேந்திராவால் சரிவர கட்ட முடியவில்லை.

இதனிடையே, தர்மேந்திரபட்டேல் மற்றும் அவரது மனைவிச் சந்தியா கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் அவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தம்பதியை தேடி வந்த நிலையில் இருவரும் இன்று நர்மதா ஆற்றுக்கரையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

கடன் தொகையை திரும்பி செலுத்த முடியாததால் தர்மேந்திராவும், அவரது மனைவி சந்தியாவும் நர்மதா ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்