மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: 2 பேர் சாவு- பாதசாரியும் உயிரிழந்த சோகம்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பாதசாரியும் உயிரிழந்தார்.

Update: 2022-11-27 18:45 GMT

சித்ரதுர்கா:

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா கைநாடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி, மோட்டார் சைக்கிள் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற பாதசாரி ஒருவர் மீதும் மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் ஸ்ரீராம்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஸ்ரீராம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்