சரகூரு அருகே மோட்டாா் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி

சரகூரு அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலியாகினர்.;

Update:2023-08-12 00:15 IST

மைசூரு-

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா பங்கவாடி கிராமத்தை சோ்ந்தவர் பிரகாஷ் (வயது 50). இவரது மனைவி சுருதி (40). நேற்று முன்தினம் இவா்கள் எச்.டி.கோட்டையில் இருந்து பங்கவாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நெம்மனஹள்ளி கிராமத்தை சோ்ந்த தேவேஷ் (50) என்பவர் எச்.டி.கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சரகூரு அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதியது.

இதில் 2 மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எச்.டி. கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பிரகாஷ், தேவேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுருதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்