மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பரிதாப சாவு
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்
சிவமொக்கா: சிவமொக்கா டவுன் பொம்மனகட்டே பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38). பெயிண்டரான இவர், நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பொம்மனகட்டே மயிலம்மா ேகாவில் அருகே சாலை வளைவில் திரும்பும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், இவரது மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து வினோபா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.