விஷ காளான் சாப்பிட்ட தாய், மகன் சாவு
பெல்தங்கடி அருகே காட்டுப்பகுதியில் கிடைத்த விஷக்காளானை சமைத்து சாப்பிட்ட தாய், மகன் இறந்தனர்.
மங்களூரு:
2 பேர் சாவு
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா புதுவெட்டு கிராமத்தை சேர்ந்தவர் குருவா மேரா (வயது 80). இவரது மகன் ஒடியப்பா (வயது 41). மற்றொரு மகன் பிரபு. இவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை குருவா மேரா காட்டுப்பகுதியில் கிடைத்த காளானை எடுத்து வந்து வீட்டில் சமையல் செய்தார். பின்னர் அந்த உணவை குருவா மேரா மற்றும் அவரது மகன் ஒடியப்பா சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் இரண்டு பேருக்கும் மயக்கம் ஏற்படுவதுபோன்று இருந்தது. இதையடுத்து அவர்கள் தூங்க சென்றனர். நேற்று காலை வெகுநேரமாகியும் 2 பேரும் எழுந்திருக்கவில்ைல. வெளியூரில் வேலை பார்த்து வந்த மகன் பிரபு வீ்ட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தாய், சகோதரன் இறந்து கிடந்தனர். 2 பேரின் உடலையும் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்ததுடன் கூச்சலிட்டார்.
போலீசார் விசாரணை
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வந்து உடலை பார்த்துவிட்டு பெல்தங்கடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர்.
அப்போது விஷக்காளானை சமைத்து சாப்பிட்டதால் 2 பேரும் இறந்ததாக தெரியவந்தது. இது குறித்து பெல்தங்கடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.