கார் மீது லாரி கவிழ்ந்து விழுந்து தாய்-மகள் உடல் நசுங்கி சாவு

கார் மீது லாரி கவிழ்ந்து விழுந்து தாய்-மகள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

Update: 2023-02-01 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் கக்கலிபுரா மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் காயத்திரி. இவருக்கு 15 வயதில் சுமோதா (வயது 15) என்ற மகள் இருந்தாள். இந்த சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று காலையில் தனது மகளை பள்ளியில் விடுவதற்காக காயத்திரி காரில் புறப்பட்டு சென்றார். பன்னரகட்டா-கக்கலிபுரா ரோட்டில் தாய்-மகள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கான்கிரீட் கலவை செய்யும் ஒரு லாரி, காயத்திரியின் கார் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதன் காரணமாக காருக்குள் இருந்த காயத்திரி, அவரது மகள் சுமோதா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்கள். தகவல் அறிந்ததும் பன்னரகட்டா போலீசார் விரைந்து வந்து கிரேன் வாகனம் மூலமாக காரின் மீது விழுந்து கிடந்த லாரியை மீட்டனர். பின்னர் காருக்குள் இருந்து தாய், மகளின் உடல்களை மீட்டார்கள். லாரி டிரைவரின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்