2024 தேர்தலில் வெற்றிபெற்று மோடி 3-வது முறையாக பிரதமராவார் - அமித்ஷா நம்பிக்கை
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி 3-வது முறையாக பிரதமராவார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.;
டெல்லி,
பாஜக மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது, நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.நான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்த்தேன். அப்போது, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைத்து மோடி 3வது முறையாக பிரதமராவார் என்பதை தெரிந்துகொண்டேன்.
1970-ம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 3வது முறையாக ஒரு பிரதமர் மக்களின் தீர்ப்பை பெற்று மீண்டும் பிரதமராவது இதுவேயாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றார்.