விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல - சுப்ரியா சூலே எம்.பி.
விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்லா என்று எம்.பி. சுப்ரியா சூலே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. மத்தியில் ஆளும் அரசின் நீட்டிக்கப்பட்ட கைகளாக அமலாக்கத்துறை, சிபிஐ பயன்படுத்தப்படுவதாக கண்ணோட்டங்கள் ஏற்பட்டுள்ளது' என்றார்.