மந்திரி எம்.பி.பட்டீல் - டி.கே.சுரேஷ் எம்.பி. இடையே பகிரங்க மோதல்
முதல்-மந்திரி பதவி விவகாரம் தொடர்பாக மந்திரி எம்.பி.பட்டீல் - டி.கே.சுரேஷ் எம்.பி. இடையே பகிரங்க மோதல் ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு:-
5 ஆண்டுகள் முதல்-மந்திரி
கர்நாடகத்தில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்
குமாரும் பதவி ஏற்றுக் கொண்டுள்ளனர். என்றாலும், ஆளுக்கு 30 மாதங்கள் முதல்-மந்திரி பதவி பங்கிடப்
பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் சித்தராமையாவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று 2 நாட்களுக்கு முன்பு மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார். பின்னர் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் கூறியதை தான், நான் கூறினேன் என சொல்லி எம்.பி. பட்டீல் விளக்கம் அளித்திருந்தார். இந்த விவகாரம் காங்கிரசில் பரபரப்பையும், சர்ச்சையும் உண்டாகியது.
மந்திரி-எம்.பி. மோதல்
இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்ததும் மந்திரி எம்.பி.பட்டீலை, டி.கே.சிவக்குமாரின் சகோதரரும், எம்.பி.யுமான டி.கே.சுரேஷ் சந்தித்து பேசினார். அப்போது 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக சித்தராமையா இருப்பார் என்று வாய்க்கு வந்ததை பேசினால், சரியாக இருக்காது, கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும், எனவே எச்சரிக்கையாக பேசும்படி எம்.பி.பட்டீலிடம் டி.கே.சுரேஷ் கூறியதாக தெரிகிறது.
உடனே என்ன பேச வேண்டுமோ, அதனை தன்னுடைய அலுவலகத்திற்குள் வந்து பேசும்படியும், தான் தவறாக எதையும் பேசவில்லை என்றும் டி.கே.சுரேசிடம், மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார். இந்த நிலையில், 5 ஆண்டுகள் சித்தராமையாவே முதல்-மந்திரியாக இருப்பார் என்று எம்.பி.பட்டீல் கூறியதால், அவரை எச்சரிக்கும் விதமாக டி.கே.சுரேஷ் பேசியதால், அவர்களுக்குள் மோதல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எச்சரிக்க யாராலும் முடியாது
இதுகுறித்து டி.கே.சுரேஷ் எம்.பி. கூறுகையில், 'சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்துள்ளார். தற்போதும் அவர் முதல்-மந்திரியாக இருக்கிறார். இன்னும் 5 ஆண்டுகள் என 10 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருக்கட்டும். தேவைப்பட்டால் எம்.பி.பட்டீல் கூட முதல்-மந்திரியாக இருக்கட்டும். இந்த விவகாரம் பற்றி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும்', என்றார்.
இதுகுறித்து மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், 'சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருப்பார் என்று வேணுகோபால் கூறியதை தான் நான் கூறினேன். இந்த விவகாரத்தில் என்னை யாரும் எச்சரிக்கவோ, மிரட்டவோ முடியாது. நான் எந்த எச்சரிக்கைக்கும் பயந்தவன் இல்லை. என்னை எச்சரிக்க யாராலும் முடியாது, நானும் எச்சரிக்கை மாட்டேன். நான் என்னுடைய தந்தை, தாய் தவிர வேறு யாருக்கும் பயந்தது இல்லை. நான் விஜயாப்புராவை சேர்ந்தவன். நான் ஒரு மூத்த தலைவர். என்னை பிறர் எச்சரிக்கும் அளவுக்கு நான் சக்தி குறைந்தவன் இல்லை', என்றார்.