மேட்டுப்பாளையம் - கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரெயில்வே மந்திரியிடம் எல்.முருகன் கோரிக்கை

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

Update: 2024-07-04 11:16 GMT

புதுடெல்லி,

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை ரெயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை வலியுறுத்தும் மனு ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை மந்திரி எல்.முருகன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில், "கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் முதல் கோவை ரெயில்நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைத்திட வேண்டும் என மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும், நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதற்கான மனுவை, இன்று ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வழங்கினேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார். 




Tags:    

மேலும் செய்திகள்