ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும்: பிரதமர் வாழ்த்து

பிரதமர் மோடி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-08 08:27 GMT

புதுடெல்லி,

கேரளா மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை யொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஓணம் நம் சமூகத்தில் ஒற்றுமை உணர்வை அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்